Categories: தமிழகம்

பைக் மீது உரசிய அரசுப்பேருந்து…பின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலி: பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கோவை: சின்னியம்பாளையம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் தர்மராஜ் (21). ஐடி ஊழியரான இவர் நேற்று மாலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது ஆர்.ஜி. புதூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து தர்மராஜ் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது உரசியதாக தெரிகிறது. இதில், நிலை தடுமாறி விழுந்த தர்மராஜ் மீது அரசு பேருந்தின் பின் சக்கரம் ஏறியது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அரசு பேருந்தை இயக்கி வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த ஓட்டுநர், சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐடி ஊழியர், அரசு பேருந்து விபத்தில் சிக்கிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பதிவுகளையும் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

6 minutes ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

1 hour ago

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

1 hour ago

கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?

விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…

2 hours ago

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

2 hours ago

This website uses cookies.