நல்லவர்களுக்கு வாக்கு கேட்க வருவது பெருமையாக உள்ளது : மதுரை வந்த நடிகர் கமல்ஹாசன் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 2:44 pm

நல்லவர்களுக்கு வாக்கு கேட்க வருவது பெருமையாக உள்ளது : மதுரை வந்த நடிகர் கமல்ஹாசன் பெருமிதம்!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதையடுத்து வேட்பாளர்களுக்க ஆதரவாக பிரச்சாரம் செய்வது தொடர்பான குழுவில் கமல் பெயர் இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பாக பணியாற்றி வரும் கம்யூனிஸ்ட் சு வெங்கடேசன் அவர்களுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்த பிரச்சாரம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது என்றார்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!