எல்லாரோட ரத்தத்திலும் கலந்திருக்கு… இப்ப வந்து திடீர்னு மாத்த சொன்னா எப்படி? மத்திய அரசுக்கு எதிராக தேமுதிக வாய்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 5:51 pm

இந்தியா என்ற பெயரை மாற்றுவதாக கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

“இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஏனெனில் 75 ஆண்டு காலமாக இந்தியா என்ற வார்த்தை நம் ஒவ்வொருவரின் மனதிலும், ரத்தத்திலும் கலந்துள்ளது. ஒரு குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிட்டு, 2 வருடங்கள் கழித்து வேறு பெயரால் அழைத்தால் அந்த குழந்தை திரும்பிக்கூட பார்க்காது. இந்த நிலையில் ஒரு நாட்டின் பெயரை அவ்வளவு சுலபமாக மாற்றுவோம் என்று கூறுவது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.”

  • AI-generated Nayanthara video அட இது நல்லா இருக்கே…இரண்டு பெண் குழந்தைகளுடன் ‘நயன்தாரா’… வைரலான கியூட் வீடியோ.!