ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்குவது மோடிதான்.. ஆனால் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது : இராம.சீனிவாசன் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 11:21 am

ரேஷன் கடையில் இலவச அரிசி வழங்குவது மோடிதான்.. ஆனால் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது : இராம.சீனிவாசன் குற்றச்சாட்டு!

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய ராம சீனிவாசன் இன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் வலாகத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்

தொடர்ந்து ராமராயர் மண்டபம் பகுதியில் அமைந்திருக்க கூடிய ராமபிரானை வணங்கி அப்பகுதியில் இருந்த பொது மக்களிடத்தில் தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ராமராயர் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் வருகை தந்தவரே தனது சின்னமான தாமரைக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் தொடர்ந்து பொதுமக்களிடத்தில் திறந்தவெளி வாகனத்தில் இருந்தவாறு பேசும்போது, உங்களுக்கெல்லாம் இலவசமாக வீடு கட்டி கொடுத்த ஒரு அரசு என்றால் அது பாஜக.

வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு கொடுத்தது நரேந்திர மோடி அரசு. வீட்டிற்கு 20 கிலோ அரிசியில் பருப்பும் கொடுப்பவர் நரேந்திர மோடி.

திமுக அரசு கொடுக்கிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம் இதை வழங்குவது நரேந்திர மோடி. நரேந்திர மோடி ரேஷனில் அரிசியும் பொருத்தம் கொடுத்தால் ஸ்டாலின் ஸ்டிக்கரை ஒட்டி வருகிறார்.

எனவே மத்தியில் மோடி அவர்கள் மீண்டும் வந்தால் தான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தான் இந்த ஏழை எளிய மக்கள் மீது அக்கறையும் அன்பு இருக்கக்கூடிய ஒரு அரசு அமையும்

எதிர்க்கட்சிகள் இங்கே வாக்கு சேகரிப்பில் வருவார்கள் அவர்கள் .பணம் கொடுத்தால் மக்கள் வாக்களிப்பார்கள். உங்களது வாக்குகளுக்கு விலை பேசுவார்கள். ஆனால் வாங்குவதும் வாங்காததும் உங்களது இஷ்டம் ஆனால் நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை சின்னம்

ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுத்தது தாமரை சின்னம்
பிரச்சாரத்தின் போது அங்கு இருந்த ஒரு மூதாட்டி எங்களுக்கெல்லாம் வீடு கிடையாது என்று சொல்ல -தாமரைக்கு வாக்களியுங்கள் உங்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்று சொன்னார் வேட்பாளர்

மூதாட்டியாக இருந்தாலும் தலையில் பாஜக தொப்பி கையில் தாமரை கொடியோடு மோடி கட்சி தாமரை என்று தொடர்ந்து முழக்கமிட்டனர்

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 272

    0

    0