படிப்பில் கவனம் செலுத்துனா மட்டும் போதாது, பெற்றோரையும் கவனிக்க வேண்டும் : மகளிர் கல்லூரி விழாவில் திமுக எம்எல்ஏ பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 5:19 pm

வேலூர் : பெண்களுக்காகவே எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழகத்தில் தான் என கல்லூரி விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசினார்.

வேலூர் மாவட்டம் சாய்நாதபுரத்தில் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50 ஆம் ஆண்டு விழா கல்லூரியின் செயலாளர் மணிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் காத்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் உதவிதொகை ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தமிழக அரசு பெண்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்து அதற்காக நிதியையும் ஒதுக்கியது தமிழக முதல்வர் தான்.

மகளிர் கல்வியில் முன்னேற்றம் அடைந்தாலும் தாய் தந்தையரை கவனிக்க வேண்டும். மேலும் எக்காரணம் கொண்டு தாங்கள் பயின்ற கல்லூரியை மறந்துவிட கூடாது மாணவர்கள் முன்னேற்றம் அனைவரின் முன்னேற்றமாகும் என்று பேசினார்.

  • Rajinikanth New Year wish பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 903

    0

    0