ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே இல்லை.. ஒருவேளை வந்தாலும் INDIA கூட்டணிக்குதான் வெற்றி : அமைச்சர் ரகுபதி!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 5:19 pm

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே இல்லை.. ஒருவேளை வந்தாலும் INDIA கூட்டணிக்குதான் வெற்றி : அமைச்சர் ரகுபதி!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி தமிழகத்தில் சென்னை திருச்சி மதுரை கோவை ஆகிய நான்கு இடங்களில் 26 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை
நடத்தப்பட உள்ளன போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் புதுக்கோட்டைக்கு இன்று வருகை தந்தது.

பிரச்சார வாகனத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்ட வரவேற்றனர் இதன் பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்ற மினி மாரத்தான் நடைபெற்றது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்., போக்குவரத்து தொழிற்சங்ககளிடம் கால அவகாசம் தான் கேட்டோம் இல்லை என்று கூறவில்லை,பொங்கலுக்கு பிறகு பேச்சு வார்த்தை நடலாம் என்று தான் கூறினோம்,அதற்கு முன்னதாகவே போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என நினைக்கிறேன், ஒரு பேச்சுவார்த்தைக்கு பின்பு தான் அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்கள் போராட்டத்தை தொடங்கி இருப்பது வருடத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சாத்தியமாக இருக்காது அவசரக் கதையில் பாஜக அரசு கொண்டு வந்தாலும் அடுத்து மத்தியில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சி தான் நாங்கள் பார்த்துக் கொள்வோம்…
கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் நடைபெற்ற முதலீட்டார்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 425

    0

    0