விஜயதாரணி பாஜகவில் இணைந்தது துரதிர்ஷ்டம்.. கட்சித் தாவல் தடைச் சட்டம் கீழ் நடவடிக்கை : செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 2:31 pm

விஜயதாரணி பாஜகவில் இணைந்தது துரதிர்ஷ்டம்.. கட்சித் தாவல் தடைச் சட்டம் கீழ் நடவடிக்கை : செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக பக்கம் விஜயதாரணி தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியான விஜயதாரணி பாஜகவில் இணைவார் என்ற செய்திகள் வெளியான போது காங்கிரஸ் கட்சி இதை மறுத்தது. அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வான செல்வப்பெருந்ததை இந்த தகவலை முற்றிலும் மறுத்திருந்தார்.

இந்த நிலையில் விஜயதாரணி தற்போது பாஜகவில் இணைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,
விஜயதாரணி பாஜகவில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது, இதனால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை.

ஆனால் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பணியை விஜயதாரணி செய்யவில்லை என்றாலும் மரியாதையோடு அவரை நடத்தி வந்தோம் என தெரிவித்தார்.

ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் விஜயதாரணி திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 210

    0

    0