கோவையில் தொழிலதிபர் வீட்டில் நடந்த ஐ.டி ரெய்டு.. கணக்கில் காட்டாத பணம் : ஏர்கன் பறிமுதல்!
Author: Udayachandran RadhaKrishnan1 June 2024, 6:28 pm
கோவையில் உள்ள தொழிதிபர் பெரோஸ்கான் பெங்களூரில் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் முறையான வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரோஸ்கான் இல்லத்தில் கோவை மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரோஸ்கான் இல்லத்தில் இருந்து கணக்கில் வராத ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சோதனை நடைபெறும் வீட்டின் அருகில் தமிழக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரோஸ்கான் இல்லத்தில் இருந்து 4 கோடியே 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்து உள்ளனர் என வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.
அவரது வீட்டில் இருந்து ஏர் கன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கொடுத்த சிக்னல்.. வேறு வழியே இல்லாமல் நாளை சரணடைய முடிவு!
குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெறும் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.