அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு.. கோவை, திருப்பூரில் பரபரப்பு…!!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 7:04 pm

கோவை மற்றும் திருப்பூரில் அமைச்சர் கேஎன் நேருவுக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம்… பாஜக நிர்வாகிக்கு தொடர்பா..? அறிக்கை வெளியிட்ட என்ஐஏ!!!

இந்த நிலையில், கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள அவிநாசி ரவி என்பவரின் அலுவலகம், ராம் நகர் பி.எஸ்.கே அலுவலகம் மற்றும் அவிநாசியில் உள்ள குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் அலுவலகம் என 3 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதா? முறையாக வரி செலுத்தி உள்ளனரா? என சோதனை நடக்கிறது. சோதனை நடைபெறும் 3 பேரும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லப்படுகிறது. தமிழக அரசின் ஒப்பந்த பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வாழ்நாள் முழுவதும் அலைய விட்டுருவேன்.. மிரட்டிய பாஜக வேட்பாளர்… டக்கென தேர்தல் அதிகாரி கொடுத்த ரியாக்ஷன்..!!!

அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!