திமுக பிரமுகர் வீட்டில் ஐடி RAID.. அலுவலகத்திலும் குவிந்த அதிகாரிகள் : நெல்லையில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 8:32 pm

திமுக பிரமுகர் வீட்டில் ஐடி RAID.. அலுவலகத்திலும் குவிந்த அதிகாரிகள் : நெல்லையில் பரபரப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நாமக்கல் பகுதியில் தனியார் கல்வி நிறுவனர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது ₹5 கோடி பணம் சிக்கியது.

தொடர்ந்து கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது-

இந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ஆவுடையப்பன் கட்சி அலுவலகத்தில்பணம் பதுக்கி இருப்பதாக தகவலை அடுத்து அங்கு வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாளையங்கோட்டை மகராஜா நகரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தினர். நெல்லை திமுககிழக்கு மாவட்ட அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

முன்னாள் சபாநாயகரான இவரது வீட்டில் சோதனை நடத்தயிருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?