பிகிலை தொடர்ந்து ‘தி லெஜண்ட்’ : சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 9:20 am

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமா துறையில் பிரபல பைனான்சியர் அன்புச்செழியன். இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்நிலையில், அன்புச்செழியன் வீட்டிற்கு இன்று அதிகாலை 5 மணிக்கு வந்த வருமான வரித்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு பிகில் பட வெளியீட்டு தொடர்பாக அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தற்போது தி லெஜண்ட் வெளியீட்டு உரிமையை அன்புச்செழியின் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!