பள்ளி மாணவர்களுக்காக இனி அதை செய்யக்கூடாது.. கண்டிஷன் போட்ட கல்வித்துறை : மாணவர்கள் ஹேப்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2022, 12:54 pm

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

6, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் அங்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலை, மாலையில் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த 15-ந்தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஆண்டு அட்டவணையில் டிசம்பர் 23-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரையில் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அரையாண்டு தேர்வை எழுதி முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு அசைமென்ட்டுகளை மட்டும் வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!