பிரியாணியில் பூச்சி.. 10 பிரியாணி, ஆம்லேட் கேட்ட ஐடி ஊழியர்கள்.. இறுதியில் ட்விஸ்ட்!

Author: Hariharasudhan
19 March 2025, 4:10 pm

கோவையில், பிரியாணியில் பூச்சி இருப்பதாக 10 பிரியாணி கேட்டு கடை உரிமையாளரைத் தாக்கிய ஐடி ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் கோவை, சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சமீபத்தில், கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்குத் தேடி வந்த அவர்கள், பிரியாணியில் பூச்சி இருந்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அந்த பிரியாணிக்குப் பதிலாக 10 பிரியாணி பார்சல் வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளனர். அதன் பின்னர் சிக்கன், ஆம்லேட்டுக்காகவும் தகராறு செய்துள்ளனர்.

Biryani

மேலும், ஓட்டல் உரிமையாளரையும் தாக்கியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து ராமச்சந்திரன் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஓட்டல் உரிமையாளரைத் தாக்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சக்திவேல் (23) மற்றும் கேரள மாநிலம் குருவாயூரைச் சேர்ந்த பஹீம் அகமத் (24) என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பாதி எரிந்த நிலையில் காவலர் சடலமாக மீட்பு.. மதுரையை கதிகலங்க. வைத்த சம்பவம்!

மேலும், அவர்கள் துடியலூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Anirudh Refuses CSK Theme Music அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!
  • Leave a Reply