அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்ததே பாஜகதான் : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2024, 6:55 pm

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே பி நட்டா உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசின் கையில் உள்ளது.

நமக்காக மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எல்லை தாண்டி செல்லும் தமிழகப் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய அரசு தலையிட்டு கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்ததே பாஜக தான். இந்தியா ஜனநாயக நாட்டில் மக்கள் சேவைக்காக யார் வேண்டு மென்றாலும் கட்சியை ஆரம்பிக்கலாம்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!