இந்தியாவுக்கு இது சரிப்பட்டு வராது… சுத்தமாக பொருந்தாது : பிரபல இயக்குநர் கடும் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2024, 10:02 pm
இந்தியாவுக்கு இது சரிப்பட்டு வராது… சுத்தமாக பொருந்தாது : பிரபல இயக்குநர் கடும் விமர்சனம்!
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடந்த உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
இந்நிலையில், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்த சிஏஏ எங்கு பொருந்தும்? என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.