இனிமேல் தான் எங்களுக்கு தீபாவளி… கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகன் பகீர் வாக்குமூலம்!!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2023, 10:58 am
இனிமேல் தான் எங்களுக்கு தீபாவளி… கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகன் பகீர் வாக்குமூலம்!!!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மகன் சரவணன் வயது 44.
இவருக்கு திருமணம் ஆகி அமுதா என்ற மனைவியும் அபிநயா என்ற மகள் மற்றும் சஞ்சய் என்ற மகன் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சரவணன் தனது வீட்டின் முன்பு கயிற்றுக் கட்டிலில் இறந்து கிடப்பதாக அவரது தந்தை கருப்பண்ணன் என்பவருக்கு தகவல் கிடைத்து மகன் வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது சந்தேகத்திற்கு இடமாக மகன் இறந்து கிடப்பதாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கருப்பண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இறந்தவரின் மனைவி அமுதா மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வைரிசெட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரவணனை தாங்கள் தான் கொலை செய்தோம் எனவும் கட்டிலில் படுத்து உறங்கியவரை தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்ததாகவும் அதற்கு முன்பாக கால்களையும் கைகளையும் கயீற்றால் கட்டி கொலை செய்தோம் எனவும் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததால் இவ்வாறு செய்ததாக பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர்.
இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளான அமுதாவையும் சஞ்சய் என்பவரையும் உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.