வேலூர் மாவட்டம் வார்டு பணிக்காக நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்த நகராட்சி துணை தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டி கூட்டணி கட்சியைச் சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு உறுப்பினராக (கவுன்சிலர்) இருப்பவர் தன்வீரா பேகம். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர். இவரது வார்டுக்குள் செல்லும் கொட்டாற்றில் குப்பை கழிவுகள் அதிகம் இருப்பதால் மழை காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுவதாகவும், இதற்கு முன் கழிவுநீருடன் சேர்ந்து தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்ததன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீடு இடிந்து விழுந்து சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6வது வார்டுக்குள் பாயும் கொட்டாற்றை தூர்வாரக்கோரி, வார்டு உறுப்பினர் தன்வீரா பேகம் பேர்ணாம்பட் நகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று தாமாக சென்று நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை அழைத்து வந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, திமுகவை சேர்ந்த பேர்ணாம்பட்டு நகராட்சியின் துணை தலைவர் ஆலியார் ஜிபேர் அகமது என்பவர், ஜேசிபி இயந்திர ஓட்டுனருக்கு போன் செய்து பணி செய்யக்கூடாது என்றும், இயந்திரம் ஏதேனும் பழுதானால் உனது சம்பளத்தில் பிடித்து விடுவேன் என கூறி தடுத்ததாகவும் தன்வீரா பேகம் குற்றம்சாட்டினார்.
மேலும், மாற்று கட்சியினரின் வார்டு என்பதால் எங்கள் வார்டில் எந்த பணியும் செய்வது இல்லை என 6வது வார்டு பெண் உறுப்பினர் தன்வீரா பேகம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் ஜேசிபியில் அவரே அமர்ந்து தூர்வாரும் பணியையும் மேற்பார்வை செய்வது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு அரசியலில் சமஉரிமை அளிக்க வேண்டும் என்று கூறும் திமுகவினரே, தன்வீரா பேகம் போன்ற துடிப்பான பெண்கள் சமூக நலனுக்காக பணியாற்றுவதை இடையூறு செய்வது நியாயமா..? என்றும், இதுபோன்ற நபர்கள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.