ஆஸ்கர் தேர்வு செய்த 276 படங்களில் இடம் பிடித்த ஜெய்பீம் : சரித்திர சாதனை படைக்குமா தமிழ் சினிமா?
Author: Udayachandran RadhaKrishnan22 January 2022, 2:16 pm
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் முத்திரை பதித்தாலும் அதற்கென தனி அங்கீகாரம் கிடைக்காமல் இருந்துள்ளது. ஆதி காலம் முதல் இந்த காலம் வரை எண்ணற்ற திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி வந்தது.
ஆனால் அந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கோ, படக்குழுவுக்கோ ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அங்கீகாரம் கிடைக்காமல் போயுள்ளது. இந்தியாவில் உள்ள பல படங்கள் பல சாதனைகளை படைத்து தனி முத்திரையும் பதித்தது.ஆனால் உலக சினிமா வரலாற்றில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை இதுவரை எந்த தமிழ் திரைப்படங்களும் வாங்கியதில்லை. சிவாஜி கணேசனின் தெய்வமகன், நாயகன், ஒத்த செருப்பு, விசாரணை என பல தமிழ் படங்கள் ஆஸ்கர் விருது பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் எந்த படத்துக்கும் விருது கிடைக்கவில்லை.. சமீபத்தில் வெளியான மண்டேலா, கூலாங்கல் படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் இணைந்துள்ள படம் ஜெய்பீம்.
ஒடுக்கப்பட்ட மக்களை வழக்குகளில் சிக்க வைத்து போலீசார் வஞ்சிப்பதை எதிர்த்து போராடும் வழக்கறிஞர் என அற்புதமான காட்சிகளை அமைத்திருப்பார் இயக்குநர் ஞானவேல். படத்தில் நடித்த மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
படத்திற்கு எதிராக விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. ஆனால் அதையெல்லாம் துடைத்தெறிந்து ஜெய்பீம் சாதனைகளை படைத்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவையே திரும்ப பார்க்கவைத்ததுஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இது வரை எந்த தமிழ்படமும் சாதிக்காததை ஜெய்பீம் படம் அசத்தி காட்டியது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந் ஜெய்பீம படத்தின் சில காட்சிகளையும், ஆஸ்கர் தனது யூடியூப்பில் வெளியிட்டிருந்தது.
தற்போது விரைவில் நடைபெற உள்ள 94வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக ஜெய்பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா நடித்திருந்த சூரரைப்போற்று ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்து குறிப்பிடத்தக்கது.