14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சிறை : குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 11:58 am

கோவை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்போரைச் சேர்ந்த தங்கம் என்பவரது மகன் செந்தில்வேல் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் செந்தில்வேலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், பரிந்துரையின் பெயரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அந்நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செந்தில்வேல் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!