உதயநிதியும், ஆ ராசாவும் விரைவல் கம்பி எண்ணுவார்கள் : இது ஹெச் ராஜா கணக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2025, 11:13 am

அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக காங்கிரஸ் விசிக உள்ளிட்ட திமுக கூட்டணியை தமிழக மக்கள் முற்றிலுமாக வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

திமுக கூட்டணி இந்துக்களுக்கு விரோதமான தீய சக்தி என்பதை தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்த அனைவரும் முழு இந்து விரோத தீய சக்திகள் தமிழகத்தில் பல இந்துக் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை வக்பு வாரிய சொத்துக்கள் என அபகரித்துள்ளனர்.

இதை ஒவ்வொரு இந்து மக்களும் புரிந்துள்ளார்கள். 1995இல் வக்பு வாரிய சட்டம் வந்தபோது வக்பு வாரியத்திற்கு சொந்தமாக இருந்த நிலம் எட்டு லட்சம் ஏக்கர். ஆனால் தற்போது 12.40 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

இந்துக்களின் சொத்துகளை இந்து கோயில்களின் சொத்துக்களை அபகரிக்க ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளது என கேள்வி எழுப்பிய எச் ராஜா இந்து கோயில்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து மின் கட்டணம் கட்டாமல் கோவில் உண்டியலில் இருந்து மின் கட்டணம் செலுத்த யார் அனுமதி வழங்கியது.

இது இந்து கோயில்களின் மீதான கொள்ளை அல்லவா என கூறினார். நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கச்சத் தீவை தாரை வார்க்கும்போது கருணாநிதி போராடி இருக்க வேண்டாமா?

ஆனால் இந்த கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு எதிராக போராடியது அப்போது இருந்த ஜன சங்க தலைவர்களே. தமிழ் உணர்வு கருணாநிதி குடும்பத்திற்கோ திமுகவிற்கோ இருக்கா தமிழ் மண்ணை தாரை வார்த்ததற்கு எதிராக போராடியது ஜன சங்கமும் பாரதிய ஜனதா கட்சியின் தான்

ஆனால் நாங்கள் தமிழ் விரோத கட்சியென கூறுகிறார்கள் இந்து கோயில்களின் சொத்துக்களை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திராவிட முன்னேற்ற கழகம்.

அதனால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் முழுமையாக தமிழக மக்கள் திமுக கூட்டணியை புறக்கணிப்பார்கள் கச்சதீவு தாரை வார்க்கும் போது அதற்கு எதிராக பாஜக போராடியது. திமுக ஏன் போராடவில்லை என ஊர் ஊராக சொல்ல வேண்டும்

எனவே இவர்கள் தமிழ் சமுதாயத்தை வஞ்சிக்கிற ஒரு கூட்டம் என்று தெளிவாக தெரிகிறது. இவர்களின் தோல்விதான் தமிழ் சமுதாயத்தின் விடியலாக இருக்கும்.

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவாரா தொடர்வாரா என்பது அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனக்கு வழங்கப்பட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளேன் பாஜக தலைமையிலான கூட்டணி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்றால் யார் தலைமையில் ஆட்சி என்பதை பாஜகவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்யும் இதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு என்டிஏ கூட்டணி ஆட்சி தான் வரும் என எங்களது உள்துறை அமைச்சர் அமிஷா கூறியுள்ளார்.

Jail Soon for Udhayanidhi and A Raja Says H Raja

இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என கூறினார். விஜயின் வீடு பனையூரில் உள்ளது அந்த பனையூர் இருக்கும் வீட்டை வக்பு வாரியம் கேட்டிருந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடுவாரா வெட்கம் இல்லையா

சட்டத்தைப் பற்றி தெரியாத மக்கள் பிரச்சினை பற்றி தெரியாத ஒரு நடிகர் இதிலும் நாடகம் ஆடுகிறார் வெறும் சினிமா நடிப்பதும் காசு சம்பாதிப்பதும் ஒரு தொழிலாக கொண்ட நடிகர் அவர் மிகப்பெரிய இந்து விரோத தீய சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் பல வழக்குகள் உள்ளன. அவர் சிறைக்குச் செல்கின்ற நால் தான் இந்த இந்துக்களுக்கான வெற்றி உதயநிதி இந்து விரோத தீய சக்தி இந்து விரோத கோமாளி ராஜா இவர்கள் இருவரையும் சிறையில் அடைகின்ற காலம் வரும் எனக் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ