தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி இன்று திரைக்கு வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ”ஜெயிலர்” திரைப்படம் இன்று ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. “ஜெயிலர்” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடன், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து புது இயக்குநர்களுடன் இணையும் சூப்பர் ஸ்டார் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை தனது நடிப்பாலும், வசீகரத்தாலும் கட்டிப்போட்டு வைத்துள்ளார் என்றே கூறலாம். சமீபத்தில் வெளியான “ஜெயிலர்” பாடலும் ரசிகர்களிடையே நல்ல Vibe-ஐ உண்டாக்கியுள்ளது.
தூத்துக்குடியில் ஜெயிலர் திரைப்படம் மாவட்டத்தில் மொத்தம் 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆராவாரத்துடன் படத்தை வரவேற்று வருகின்றனர்.
அதேபோல, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் ரசிகர்கள் ரஜினிகாந்த்க்கு பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து வருகின்றனர். மேல தாளங்கள் முழங்க பெண் ரசிகர்கள் உற்சாக நடனத்துடன் படத்தை வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசுகள் வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடினர். அதேபோன்று மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடி ரஜினிகாந்த் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இதனால் திரையரங்கம் முழுவதும் விழா கோலம் கண்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.