விஜய் ரசிகரை தரதரவென இழுத்து வந்து தாக்கிய ரஜினி ரசிகர்கள்… ஜெயிலர் படம் பார்க்க வந்த போது நிகழ்ந்த விபரீதம்..!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 4:51 pm

சென்னையில் ஜெயிலர் படம் பார்க்க வந்த விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கி வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரஜினிக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. இப்படியிருக்கையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, காக்கா, கழுகு ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு கதை சொன்னார். அதில் அவர் காக்கா என கூறியது நடிகர் விஜய்யை தான் தகவல்கள் பரப்பப்பட்டு, சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இதனால், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கிடையே சோசியல் மீடியாவில் வார்த்தை மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. இதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

பிற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கே படம் வெளியான நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்கான வெற்றி தியேட்டரில் வெளியான ஜெயிலர் படத்தை காண சில விஜய் ரசிகர்களும் வந்தனர். அப்போது, தியேட்டரில் அவர்கள் ரஜினி ஒழிக என கோஷமிட்டதாக கூறப்படுக்கிறது. மேலும், படம் நல்லா இல்லை என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் டென்ஷன் ஆன ரஜினி ரசிகர்கள், கோஷம் போட்ட விஜய் ரசிகரை தரதரவென இழுத்து வந்து அடி வெளுத்து வாங்கி இருக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ