போலீஸ் ஸ்டேஷன் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை… திருச்சியில் பயங்கரம்… எஸ்ஐ மீது பாய்ந்த நடவடிக்கை !!

Author: Babu Lakshmanan
29 April 2023, 2:33 pm

திருச்சி ; திருச்சி அருகே சிறை காவலர் காவல் நிலையத்தில் முன்பு தீக்குளித்து விவாகரத்தில் எஸ்ஐ பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையம் முன்பு நேற்று சிறை காவலர் ராஜா என்பவர் தீக்குளித்த விவகாரத்தில் எஸ்.ஐஆக பணிபுரிந்து வந்த பொற்செழியன் பணிஇடை நீக்கம் செய்து திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

தீக்குளித்த ராஜா கடந்த மாதம் சொத்து பிரச்சனை தொடர்பாக கொடுத்த புகாரை எஸ்ஐ பொற்செழியன் முறையாக விசாரிக்காததால் ராஜா தீக்குளித்ததாக கூறப்பட்ட நிலையில், பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தீக்குளித்த ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினைர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்