சிவகார்த்திகேயனின் ‘ஜலபுலஜங்கு’ வீடியோ பாடல்.. இணையத்தில் வைரல்..!

Author: Rajesh
12 May 2022, 12:06 pm

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தான் டான். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இப்படத்தில் இருந்து ஜலபுல ஜங்கு, பிரைவேட் பார்ட்டி போன்ற எல்லா பாடல்களும் ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுவிட்டது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது. அதில் அரசியல், காலேஜ் லைஃப், காதல், ரகளை, மிரட்டலான சீன்கள், அழுகை என சகலமும் ட்ரைலரிலே உள்ள நிலையில் மக்கள் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
தற்போது, ஜலபுலஜங்கு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1131

    0

    0