அந்தரங்க உறுப்பில் அடித்து ஜல்லிக்கட்டு வீரர் கொலை… போதையில் கும்பல் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 4:52 pm

அந்தரங்க உறுப்பில் அடித்து ஜல்லிக்கட்டு வீரர் கொலை… போதையில் கும்பல் வெறிச்செயல்!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் மாதா கோயில் பகுதியில் சேர்ந்த அருண்ராஜ்(41 ) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாளன், சங்கர் ,ரமேஷ் உள்ளிட்டோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 19 அன்று தயாளன், சங்கர் ரமேஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அருண் ராஜ் என்பவரிடம் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் அருண் ராஜை கட்டையால் தாக்கியுள்ளனர் இதில் படுகாயம் அடைந்த அருண் ராஜ் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

மேலும் படிக்க: விடுமுறை முடிந்து சென்னை திரும்புறீங்களா? வந்தாச்சு SPECIAL TRAIN.. நெல்லைவாசிகள் குஷி!!

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த லால்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதைப்பற்றி அவருடைய மனைவி பிளாரன்ஸ் கூறியதாவது:
என்னுடைய கணவரை முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு தலை கை கால் மற்றும் அந்தரங்க இடத்திலும் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் எனது கணவர் உயிரிழந்துள்ளார். எனது கணவரை கொன்றவர்கள் கண்டிப்பாக சிறைக்குச் செல்ல வேண்டும் எனக்கு நீதி வேண்டும் என கூறினார்

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!