இந்த விஷயத்திலும் ஸ்ரீதேவி மாதிரியா? பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஜான்வி?. அப்போ அவருக்கு இது 3வது மனைவியா??
Author: Udayachandran RadhaKrishnan19 March 2022, 6:01 pm
தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி என்றாலே எல்லோருக்கும் குஷி வந்துவிடும். அழகு, கவர்ச்சி திறமை என ஒட்டுமொத்தமும் ஒன்றாக ஒரே உருவத்தில் வந்த தேவதை என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஸ்ரீதேவியை உருகி உருகி காதலிக்காத நடிகர்களே இல்லை. எப்படியும் இவர் தமிழ் சினிமா நடிகரை தான் திருமணம் செய்வார் என்றே அன்றே பல ஊடகங்கள் ஊகித்தன.
ஆனால் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி திரும்பி வரவேயில்லை. அங்கேயே திருமணம், குடும்பம் என செட்டிலானார். ஆனால் எந்தளவுக்கு சினிமாவில் டாப் கியர் போட்டு மேலே ஏறினாரோ, தனிப்பட்ட வாழ்க்கை அந்த மாதிரி அமையவில்லை.
காரணம் அவர் செய்தது ஏற்கனவே திருமணமான போனிகபூரைத்தான். அவர் நல்ல வசதியான வம்சாவளியாக இருந்தாலும், ஸ்ரீதேவிக்கு அவர் கொஞ்சம் கூட பொருத்தமில்லை என்பது அன்றைய காலத்து டாக் ஆகவே இருந்தது.
ஆனால் விதி சும்மா விட்டதா, திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்ததால் வேறு வழியின்றி திருமணம் செய்ய வேண்டிய நிலை. திருமணம் செய்த பின் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர் இரண்டாவது மகள் குஷி கபூடா. போனிகபூர் படத் தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இணைந்து படங்களை தயாரித்தார்.
தமிழில் 1986ல் கடைசியாக நடித்த அவர் மற்ற மொழிகளில் 1994ம் ஆண்டு வரை நடித்தார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அவர், 2013ம் ஆண்டு வெளியான இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் திரைப்பயணத்தை துவங்கினார்.
மீண்டும் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். இவர் தமிழில் கடைசியாக விஜய் நடித்த புலி படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் தனது மூத்த மகளை நடிக்க முயற்சி எடுத்து, 2018ல் அந்த படம் வெளியாவதற்கு முன்பே ஸ்ரீதேவி மரணமடைந்தார்.
இதையடுத்து ஜான்வி கபூர் தனது தாயை போல இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அப்படியே அந்த எதிர்பார்பபு தலைகீழானது. கவர்ச்சியில் உச்சம் தொட்ட ஜான்வி பல்வேறு இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்திக் ஜான்வி கபூருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். MR & MRS MAGHI என டைட்டில் சூட்டப்பட்டிருக்கும் அந்த படத்தில் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் பயிற்சியாளராகவும், ஜான்வி கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் இருவரும் நடிக்கும் போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் உலா வருகிறது. இது பற்றி பிரபல பத்திரிகையாளரும், துணை நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஏற்கனவே தினேஷ் கார்த்திக் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து, இரண்டாவதாக ஸ்குவாஷ் வீரங்கனையான தீபிகா பல்லிகலை திருமணம் செய்தார். தற்போது மூன்றாவதாக ஜான்வி கபூருடன் இணைவார் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.
இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் , அதே சமயம் தாயை போல இவர் ஏற்கனவே திருமணமானவரை திருமணம் செய்வாரா அல்லது இது வெறும் படத்தற்கான ப்ரோமஷனா.. இல்லை வெறும் நட்பா என்பது அவர்கள் சொன்னால் தான் தெரியும் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.