பழனி கோவிலில் குவிந்த ஜப்பானியர்கள்.. பட்டையை தீட்டி பக்திப் பரவசம் : மெய்சிலிர்த்த பக்தர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan20 April 2024, 6:54 pm
பழனி கோவிலில் குவிந்த ஜப்பானியர்கள்.. பட்டையை தீட்டி பக்திப் பரவசம் : மெய்சிலிர்த்த பக்தர்கள்!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது பல்வேறு நாட்டு கரன்சிகள் கிடைப்பதே இதற்கு உதாரணம். இந்நிலையில் இன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேற்றனர். இவர்களில் பலரும் நல்ல தமிழ் பெயரை சூடியுள்ளனர்.
மேலும் படிக்க: பெண்ணுடன் இணைந்து ஹெல்மெட் திருடும் ZOMATO ஊழியர்.. வைரலாகும் ஷாக் VIDEO!!
தமிழகம் வந்துள்ள இவர்கள் நவகிரக ஸ்தலங்கள், ஆறுபடை வீடுகள், சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபட வந்துள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமத்துடன் காட்சியளித்ததை பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.