சந்தோசம் என்றாலும்…இது எங்களுக்கு ரொம்ப அவமானம்…பும்ராவை பாராட்டிய ஆஸி.அணியின் அனுபவ வீரர்….!

Author: Selvan
6 January 2025, 9:11 pm

பும்ரா பந்தை எதிர்கொள்ள பயம் ஆஸி.வீரர் பேட்டி

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.இந்த தோல்வி மூலம் இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் விவாத பொருளாக மாறியுள்ளனர்.கடந்த 10 வருடமாக இருந்த கோப்பையை கைவிட்டது மட்டுமல்லாமல்,உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் செல்லும் வாய்ப்பையும் கோட்டைவிட்டது.

Jasprit Bumrah Border Gavaskar hero

இந்த தொடரில் ரசிகர்களுக்கு ஒரே ஆதரவாக இருந்தது என்றால் அது பும்ராவின் மிரட்டலான பௌலிங் மட்டும் தான்,மற்றபடி அணியில் இருந்த மற்ற வீரர்கள் எதற்காக இருந்தார்கள் என்ற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

பும்ரா இந்த தொடர் முழுவதும் எதிரணியை தன்னுடைய அசத்தலான பௌலிங்கால் மிரட்டி 32 விக்கெட்களை கைப்பற்றி,தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வாங்கினார்.

Usman Khawaja praises Bumrah bowling

இந்த நிலையில் ஆஸி.அணியின் தொடக்க வீரரான உஷ்மான் கவாஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பும்ராவை புகழ்ந்து பேசியுள்ளார்.அதாவது ‘நான் தொடர்ந்து பும்ராவின் பந்துக்கு ஆட்டமிழந்து வந்தேன்.என்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் கடினமான பௌலர் என்று சொன்னால் நான் பும்ராவை தான் சொல்லுவேன்,மேலும் பும்ரா கடைசியில் முதுகுவலி பிரச்சனை காரணமாக விளையாடவில்லை,ஆனால் அந்த விஷயத்தை நாங்கள் சந்தோசமாக எடுத்துக்கொண்டதற்கு அவமானப்படுகிறோம்,அவர் ஆடாத காரணத்தால் எங்கள் அணி வெற்றிபெற எளிதாக இருந்தது.

இதையும் படியுங்க: பும்ரா இல்லனா இதான் கதி…வரலாற்றிலேயே படுமோசமான 2 ஓவர்கள்…ஆஸி.வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்ததா..!

இந்த மாதிரி திறமையான பவுலரிடம் சாம் கான்ஸ்டாஸ் திமிராக நடந்து கொண்டது நல்லது கிடையாது.பும்ரா எப்போது கோவப்படமாட்டார்,நல்ல குணத்தை வைத்துள்ள அவர் முகத்தில் சிரிப்போடு இருப்பார் என்று கூறினார்.

மேலும் அந்த அணியின் மற்றொரு வீரரான டிராவிஸ் ஹெட் பும்ரா கடைசி நேரத்தில் பந்து வீச வராததை பார்த்து எங்கள் அணியில் இருந்த 15 வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தோம்,அவர் மிகசிறந்த செயல்பாட்டாளர் என குறிப்பிட்டிருந்தார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 25

    0

    0

    Leave a Reply