Categories: தமிழகம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: முழு பின்னணியையும் கண்டறிய வேண்டும் – ஜமீஷா முபினை இயக்கியது யார்?.. ஜவாஹிருல்லா கேள்வி..!

கோவை: கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி மற்றும் இயக்கம் யார் என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும் என கோவையில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டியளித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் பேசும்போது:-

சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் -யை சந்தித்துதோம். ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்தின் போதும் மக்கள் துன்பத்துக்கு ஆளாகினர்.

பின்னர் கோவை சகஜ நிலை திரும்ப சில ஆண்டுகள் ஆகியது. இந்த நிலையில் தற்போது அமைதியான கோவை மாநகரில் அமைதி நிலைநாட்டுவது அனைவரின் கடமை.

இனி இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறக் கூடாது. இதன் கவலைகளை ஆணையாளரிடம் பகிர்ந்து கொண்டோம். ஆணையாளர் எடுத்த முயற்சிகளை எங்களிடம் தெரிவித்தார்.

கடந்த குண்டுவெடிப்பின் போது ராதாகிருஷ்ணன் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு தற்போது பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதல் என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன..? அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜெகர்ஹான் என்ற அயோக்கியனுடன் இவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வருகிறது. அதே நேரத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற நிலையில் பின்னணி உள்ளது.

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களாலும் இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது.

இவர்கள் யாரின் அரசியல் லாபத்திற்காக கையாட்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களது கருத்து. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பான முறையில் விசாரணை செய்ய வேண்டும்.

அதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை உள்ளது என்று காவல் ஆணையாளர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். பேட்டியில் அவர் 2019 க்கு முதற்கொண்டு இதுபோன்ற சீர்குலைவு நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது என்கிறார்.

இன்னொரு அதே பேட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையின் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டது என்கிறார். இப்படி காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருந்தால் 2019 முதல் எப்படி சீர்குலைவு நடைபெற்று இருக்கும்.

இதற்கு மாநிலக் காவல்துறை பொறுப்பு அல்ல. காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மாலைக்குள் அனைத்து விஷயங்களையும் கொண்டு வந்தது நமது தமிழக காவல்துறை, எனது கருத்துப்படி கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரும். என் ஐ ஏ எப்படி செய்யப் போகின்றது என்பது ஒரு கேள்வி குறி தான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

15 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

15 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

16 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

16 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

17 hours ago

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…

17 hours ago

This website uses cookies.