ஜெயலலிதா நன்றி கடன் பட்டவர்.. அவருக்கு நான் நல்லது தான் செஞ்சேன் : திருநாவுக்கரசர் ஓபன் டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan15 ஆகஸ்ட் 2023, 11:29 காலை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு வங்கி அதிகாரிகளோடும் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் மூலமாக என்னென்ன கடன்கள் எவ்வளவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஜெயலலிதான் எனக்கு நன்றி கடன் பட்டவர், ஜெயலலிற்கு தான் நான் நல்லது செய்துள்ளேன், அவர் எனக்கு நன்மை ஏதும் செய்ததில்லை, கெடுதல் தான் செய்துள்ளார்.
ஜெயக்குமார் யார், அவர் எப்போது அதிமுகவிற்கு வந்தார், அப்போது அவர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள் என்பது எனக்கு தெரியது,
விவாதம் ஜெயலலிதா பிரச்சனை குறித்தும் எனக்கும் தான் இதில் ஏன் தேவையில்லாமல் ஜெயக்குமார் போன்றவர்கள் என்னை பற்றி கருத்து சொல்கின்றனர்.
அதிமுகவில் நான் உண்ணவே இல்லை, அப்புறம் எப்படி உண்டக வீட்டுக்கு துரோகம் பண்ண முடியும், ஜெயலலிதா தான் என்னிடமிருந்து உண்டு உள்ளார்.
நான் இன்று பேசுவது தான் என் கருத்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசுவதாக சில பத்தரிக்கை ஆதாரங்களை சிலர் காட்டினால் அதற்கு வழக்கு வேண்டுமெனால் போட சொல்லுங்கள்-
என்னை பொருத்தவரை தற்போது இது தேவையில்லாத விவாதம் தேவையில்லாத விவாதத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து விட்டார். இந்த பிரச்சனை நடந்தபோது நிர்மலா சீதாராமன் வெளிநாட்டில் இருந்தார்
நீட் தேர்வு விவாகரத்தில் தமிழகம் மட்டும் விலக்கு கேட்கிறது, நாங்களும் விலக்கு கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்,இதனை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதால் மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாத சூழலில் உள்ளது, மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். முன்பை விட தற்போது அதிக தமிழகத்திலிருந்து மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் தற்போது நன்றாக நீட் தேர்விற்காக தங்களை பயிற்சி எடுத்துக் கொண்டு மாணவர்கள் தயாராகி வருகின்றனர் வரும் காலங்களில் அதிக அளவு மாணவர்கள் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவார்கள் இருப்பினும் நீட் தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு
நீட் தேர்வை ரத்து செய்ய நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம், துரதிஷ்டவசமாக ஒரு சில சம்பவங்கள் இது போல் நடப்பது வேதனை அளிக்கிறது,
தமிழிசை ஆளுநராக உள்ளார் இந்த விவகாரத்தில் அவர் கருத்து சொல்ல வேண்டியதில்லை, சம்பவத்தின் போது அவரது தந்தை அவையில் இருந்ததால் என்ன நடந்தது என்று அவருக்கு தெரியும் வேண்டுமென்றால் அவர் தற்போது கருத்து சொல்லலாம் தமிழிசை இந்த விவாகரத்தில் கருத்து சொல்ல தேவையில்லை
ஆளுநராக இருந்து கொண்டு அரசியல் பேசுவது என்பது தவறு அரசியல் பேச வேண்டும் என்றால் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் ரீதியாக கருத்து கூறலாம்
நான் எம்பியாக உள்ளேன் எந்த பதவிக்காக நான் பேசப் போகிறேன். எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளர் இருந்துகொண்டு எப்படி அதிமுகவுக்கு எதிராக கருத்து கூறுவார் திமுகவுக்கு ஆதரவாக அவர் பேசுவார் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்
தற்போது தமிழகத்தில் திமுகவும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருவதால் இருவரும் பேசி தீர்க்க வேண்டும் என்று காவேரி பிரச்சனையில் கருத்து கூறுகின்றனர் கடந்த முறை தமிழகத்தில் அதிமுகவும் கர்நாடகத்தில் பாஜகவும் ஆட்சி செய்தது அப்போது இரண்டு கட்சி நேரம் பேசி காவிரி பிரச்சனையை தீர்த்து இருக்கலாமே என்றார்.
0
0