விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கியவர் ஜெயலிலதா.. அவர்களை பாதுகாத்த அதிமுகவுக்கு வாக்களியுங்க : கேபி முனுசாமி பிரச்சாரம்!
Author: Udayachandran RadhaKrishnan3 April 2024, 2:05 pm
விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கியவர் ஜெயலிலதா.. அவர்களை பாதுகாத்த அதிமுகவுக்கு வாக்களியுங்க : கேபி முனுசாமி பிரச்சாரம்!
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து சூளகிரி மத்திய ஒன்றியம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கேபி முனுசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார்.
சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட உங்கட்டி, தோரிப்பள்ளி, தாசனபுரம், கானலட்டி, புளியரசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்றும், விவசாய நிலத்தில் பயிர் செய்பவர்களை நேரடியாக சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார் அவருக்கு ஒதுக்கியுள்ள இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
சூளகிரி பகுதி விவசாயம் நிறைந்த பகுதி இந்த பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்திருந்தாலும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் கோரிக்கை வைத்து விவசாய நிலங்களை எடுக்காத நல்ல சூழல் உருவாகியுள்ளது.
விவசாயப் பகுதிகளுக்கு நீர் ஆதாரம் குறைவாக உள்ள காரணத்தினால் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்த பொழுது சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கினாலும் கூட பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்பவர்களுக்கு மின் கட்டனம் வசூல் செய்யப்பட்டது. 2011ல் இலவச மின்சாரம் கேட்டு பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்பவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த செய்தியை ஜெயலலிதா அவர்களிடம் தெரிவித்த போது எல்ல விவசாயிகளும் ஒன்று தான் என கூறி பசுமைகுடில் அமைத்து விவசாயம் செய்பவர்களுக்கும் மின் கட்டணத்தை ரத்து செய்தார்.
அந்த வகையில் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி அதிமுக. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.