எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு… விஜயகாந்த் நினைவிடத்தில் ஜெயம் ரவி அஞ்சலி.. மலரும் நினைவுகளை பகிர்ந்து புகழஞ்சலி!

Author: Babu Lakshmanan
5 January 2024, 7:58 pm

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கும் சந்தோசம் தான் என்றும், அதுநான் நியாயமான ஒன்று என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் மறைந்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, பல்வேறு திரை துறை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மாலை நடிகர் ஜெயம் ரவி நேரில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது :- கேப்டன் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உள்ளம். அவர் நம்மோடு இல்லாமை இருப்பது தனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.

அவர் செய்த நன்மைகளை அவரது குடும்பத்தினர் பின்தொடர்ந்து செய்து வருகின்றனர். நடிகர் சங்கம்மும் கடைபிடிக்கும். நிறைய நல்ல விஷயங்கள் செய்துள்ளார். நடிகர் சங்கம் மட்டுமல்ல, அவர்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாருக்கும் உதவிகள் செய்திருக்கிறார். நல்ல எண்ணம் படைத்தவர். அவர் இப்பொழுது நம்முடன் இல்லை என்பதை நினைக்கும் போது ஏற்றுகொள்ள முடியவில்லை.

எனது தந்தையும், நடிகர் விஜயகாந்த் நெருங்கிய நண்பர்கள். தான் விஜயகாந்தை போல வர வேண்டும் என்று அவரது தந்தை வலியுறுத்துவார்.

நான் தாஸ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது கேப்டன் விஜயகாந்த் ஒரே இடத்தில் சண்டை காட்சிகள் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது கேப்டன் விஜயகாந்த் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதற்கு சென்று இருந்த பொழுது கேப்டன் விஜயகாந்த் தான் சண்டை காட்சிகள் நன்றாக நடிப்பதாக ஸ்டண்ட் மாஸ்டரிடம் தெரிவித்தார். நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது எனக்கும் சந்தோசம் தான். அதுநான் நியாயமான ஒன்று, நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடிகர்கள் சேர்ந்து அதைப் பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1535

    0

    0