இவங்க எல்லாரும் ரொம்ப ஆபத்தானவங்க.. யாரை சொல்கிறார் ஜெயம்ரவி மனைவி.?
Author: Rajesh19 May 2022, 4:52 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. தற்போது, மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர், அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஆர்த்தி. தொடர்ந்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், குடும்பங்கள் தொடர்பான பதிவுகள் என அடிக்கடி பல விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த பதிவில், “உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக, அல்லது நண்பராக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாக தான் பார்ப்பார்கள். இந்த பிரபஞ்சமே இறுதியில் அவர்களை களை எடுக்கும். நீங்கள் எதுவும் போராட வேண்டியதில்லை” என இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜெயம் ரவியுடன் கருத்து வேறுபாடு வந்துள்ளதா என நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.