தமிழ் சினிமாவில் தன்னிகரில்லா நடிப்பு திறமையை வைத்திருப்பவர் நடிகர் விக்ரம். ஒவ்வொரு படத்திலும் மெனக்கெட்டு நடிப்பார். தனது உடலை ஏற்றி இறக்கி படத்திற்காக கஷ்டப்பட்டு உழைப்பவர்.
ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள நடிகர் விக்ரமின் அடுத்த படம் கோப்ரா. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தில் கேஜிஎஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி, மிருணாளினி, மீனாட்சி கோவிந்தராஜன், மியா ஜார்ஜ், இர்பான் பதான் என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விக்ரம், ஸ்ரீநிதி, மீனாட்சி, மிருளாணினி உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகர் விக்ரம், கேஜிஎஃப் படம் பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருந்தது. அழகான கதாநாயகியுடன் யாஷ்க்கு பதில் நான் நடித்திருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் இப்போது அது உண்மையாகிவிட்டது. நல்ல திறமையான நடிகை ஸ்ரீநிதி என புகழாரம் சூட்டினார்.
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
This website uses cookies.