கடைக்குள் புகுந்து நகைக்கடை உரிமையாளர் மீது கொடூரத் தாக்குதல் ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி.. 5 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
9 March 2024, 10:43 am

நகை கடை உரிமையாளரை கடையில் புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளனர்.

வேலூர் மாநகர் காந்தி ரோட்டில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருபவர் ஆனந்தன். நேற்று மாலை இவர் கடையில் இருந்த போது அங்கு வந்த நான்கு பேர் சரமாரியாக தாக்கி மிரட்டி உள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நகை கடை உரிமையாளர் ஆனந்தன் என்பவருக்கு சேண்பாக்கம் பகுதியில் நீச்சல் குளம் இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த நபர்கள் அடிக்கடி தன்னிடம் தகராறு செய்ததாகவும். அதனை கண்டித்தற்கு நேற்று மாலை கடைக்கு வந்த 4 பேர் என்னை தாக்கி, கடையை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நகைக்கடை மற்றும் நீச்சல் குளம் உரிமையாளர் ஆனந்த் மீது தாக்குதல் நடத்திய அதிமுக மாநகர மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ் (31), நல்லதம்பி (46), கார்த்திகேயன் (50), அரவிந்த்சாமி (26), டக்கர் (எ) ஜானகிராமன் (48) ஆகியோரை வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 427

    0

    0