கடைவீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 3:42 pm

பொள்ளாச்சி கடை வீதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்கள்.

பொள்ளாச்சி கடைவீதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர்.

தீடீரென செயின் பறித்ததில் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார், அப்பகுதி வியாபாரிகள் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டபகலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…