இடத்தகராறால் நகைக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2023, 11:59 am

பழனி அண்ணா நகரில் குடியிருந்து வருபவர் சதீஷ் ஆனந்த். பழனியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சதீஷ் ஆனந்துக்கு சொந்தமான இடம் அண்ணா நகரில் உள்ளது. ஓராண்டுக்கு முன்பாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் சதீஷ் ஆனந்த் கட்டியுள்ள கடைக்கு ஒட்டி உள்ள இடத்தில் சிலர் கொட்டகை அமைக்க வேலை செய்தபோது சதீஷ் ஆனந்த் தடுத்து நிறுத்தியுள்ளார்.

அந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறியுள்ளார், அப்போது அங்கு வந்த சிலர் சதீஷ் ஆனந்திடம் வாக்குவாதம் செய்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ் ஆனந்த் உடல் முழுவதும் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

உடலில் காயம் பட்ட சதீஷ் ஆனந்த் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கத்தி குத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?