தர்மபுரி: அரூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து முகமுடி கொள்ளையர்கள் சுமார் 2.5 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய கடை வீதிகளில் மூன்று நகைக்கடைகளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் ஞானவேல் என்பவருக்கு சொந்தமான கடையின் பூட்டுகளை உடைத்து வெள்ளி பொருட்களான ரூ.3 லட்சம் மதிப்பிலான கொடி, கை, மற்றும் கால் செயின்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளார்.
மேலும், அருகில் இருக்கும் அசேன், முரளி இவர்களின் இரண்டு கடைகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். இரண்டு கடைகளிலும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.
முக்கிய கடைவீதி பகுதியாக விளங்கக்கூடிய பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது வணிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அரூர் பகுதிகளில் கடந்த 7 மாதங்களில் சுமார் இருபது திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் காரணமாக பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
மேலும் அரூர் பேருந்து நிலைய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணி குறைவாக உள்ளதாகவும் இதன் காரணமாக தான் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் காவலர்களின் பற்றாக்குறைகளை போக்கி கூடுதல் காவலர்களை நியமனம் செய்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதே வணிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
This website uses cookies.