இந்த அட்ரஸ் எங்கிருக்குனு சொல்லுங்க : முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 7 சவரன் நகை பறிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 March 2022, 2:03 pm
கோவை : குனியமுத்தூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புதூரை சேர்ந்தவர் தம்புராஜ். இவரது மனைவி சுகுணா (வயது 82). இன்று காலை இவர் தன் வீட்டின் முன்பு வளர்க்கும் செடிகளுக்கு களையெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மூதாட்டியின் அருகே வந்து முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த சுகுணா இதுகுறித்த் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.