மூதாட்டியிடம் 12 சவரன் நகை வழிப்பறி… பைக்கில் தப்பிய கொள்ளையர்கள் விபத்தில் சிக்கிய பரபரப்பு சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 11:59 am

பழனியில் நடந்து சென்ற மூதாட்டி இடம் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரம் என்பவரது மனைவி சுலோச்சனா (வயது 71). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ரெணகாளியம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அர்ச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

அதில் ஒருவரை மட்டும் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நகைபறிப்பில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லும் போது விபத்தில் சிக்கி கீழேவிழும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த காட்சியில் நகையை பறித்துக்கோண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் செல்லும் இருவரும் முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதி மின்கம்பத்தில் மோதி கீழே விழுவதும், விழுந்தவுடன் பலத்த காயத்துடன் இருவரும் சுலோச்சனாவிடம் இருந்து பறித்து சென்ற நகையை கீழே போட்டுவிட்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது.

  • Vishal-Suchitra viral video நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!
  • Views: - 561

    0

    0