திருச்சிக்கு வந்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்… சமயபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பாஜகவினர்!!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2023, 9:52 pm
திருச்சிக்கு வந்த ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்… சமயபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பாஜகவினர்!!
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனை தொடர்ந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சமயபுரம் கோவிலுக்கு வருகை தந்தார் சமயபுரம் கோவிலில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடி மரத்தை தரிசனம் செய்தார். பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்து பின்னர் கோவிலில் சுற்றி வந்தார்.
சமயபுரம் கோவில் வருகை தந்த ஜார்கண்ட் ஆளுநருக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் சமயபுரம் காவல் ஆய்வாளர் காணக் கிளியநல்லூர் காவல் ஆய்வாளர் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தரிசனம் செய்தார்.