பிரதமர் மோடி, அமித்ஷா நிலைநாட்டிய சமத்துவம்…. உறுதிபடுத்திய உச்சநீதிமன்றம் ; ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பேச்சு..!!
Author: Babu Lakshmanan12 December 2023, 8:32 am
காஷ்மீர் 370 வழக்கில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நிலை நாட்டிய சமத்துவத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது என மதுரையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; காஷ்மீர் 370 வழக்கில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நிலை நாட்டிய சமத்துவத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அமலாக்கத்துறையை பழிவாங்குவதற்காக தமிழக அரசு சோதனை நடத்தவில்லை, என கூறினார்.