பத்திர பதிவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
Author: Babu Lakshmanan8 November 2022, 11:51 am
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக பணி புரிபவர் நிஷா. இவர் பத்திரப் பதிவு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.
இதன் பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் கலெக்டர் சமீரன் பெண் ஊழியர் நிஷாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார் மேலும் காவல் துறையின் குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது, என அதில் கூறப்பட்டுள்ளது.