தேசியமா..? தமிழகமா..? என்பது குறித்து விரைவில்… ஆனால், அந்த முடிவில் மட்டும் உறுதி… ஜான் பாண்டியன் பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 9:58 pm

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் திருநெல்வேலி கொக்கிர குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாக முகவர்களுக்கான பயிற்சி கூட்டமும் நடைபெற்றது.

தொடர்ந்து ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அனைத்து அரசியல் கட்சியினரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி. தென்காசி உட்பட 3 மாவட்டங்களுக்கு பாக முகவர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்டாயம் போட்டியிடும். நான் போட்டியிடுகிறேனா எனது கட்சியை சார்ந்த வேற யாரும் போட்டிடுவார்களா? என்பது குறித்து பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுப்போம்.

தேர்தலின் போது உள்ள அரசியல் சூழலை பொறுத்து அதிமுகவுடன் கூட்டணியா? பாஜகவுடன் கூட்டணியா? என்பது குறித்து முடிவு எடுக்கபடும். தேசியமா, தமிழகமா என்பது குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

பாஜகவோடும், அதிமுகவோடும் நட்புடன் தான் இருந்து வருகிறோம். வரக்கூடிய தேர்தல் மட்டும் இல்லை. எப்போதுமே மத்தியில் ஆட்சி அமைப்பது மோடி தலைமையிலான அரசு மட்டுமே. இந்தியா கூட்டணி தற்போது சீர்குலைந்துள்ளது. அவர்களிடம் ஒற்றுமை இல்லை. இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்று சொல்ல முடியாத நிலையில் அவர்கள் உள்ளார்கள்.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து கேள்விக்கு சிலர் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஒரு சிலர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறார்கள் முடிவு வரட்டும் பார்க்கலாம். தமிழகத்தை மட்டும் வைத்து இந்தியாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியாது, என்று தெரிவித்தார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 462

    0

    0