மகிழ்ச்சியில் மத்திய அமைச்சர்.. பழனி மலையில் திடீர் தரிசனம் : வரவேற்ற அதிகாரிகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 8:50 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை, கால்நடைத்துறை, மற்றும் மீன் வளர்ப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தண்டாயுதபாணி நிலையத்திற்கு வருகை தந்தார்.

தொடர்ந்து வருவாய் துறையின் மூலம் மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன. மேலும் தண்டபாணி நிலையத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சரை அரசு அதிகாரிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.

மேலும் நகரின் நிலைப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய இணை அமைச்சர் கலந்து ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு ரோப்கர் வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மத்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன.

மேலும் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு மத்திய இணை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ரோப் கார் வழியாக கீழே இறங்கி வந்த மத்திய இணை அமைச்சர் சாலை மார்க்கமாக போடியில் நடைபெற உள்ள புதிய இரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்றார்.

இந்நிகழ்வில் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் அலுவலர்களும் பணியாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்…

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!