ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளியா? அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிபதிகள்!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2024, 7:07 pm
சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்தார்.

மனுவில், “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தவறான முறையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதில், வாதாடிய வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், “அண்ணா பல்கலைக்கழகம், சென்னையின் இதயப் பகுதியிலுள்ள ஒரு பிரபலமான நிறுவனம். இங்கு நடந்த பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே உயர்நீதிமன்றம் கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படியுங்க: அந்த ‘சாரை’ காவல்துறை மறைக்கிறது.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டனர்.
பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி பரிந்துரைக்க விரும்பினார், மேலும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இன்று மாலை 4.45 மணியளவில் வழக்கு விசாரணை ஆரம்பமானது.

அதன்போது, நிபுணர் விசாரணை நடைபெற்று வரும்போது, நீதிபதி காவல் ஆணையரிடம் “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என எப்படி முடிவுக்கு வர முடியும்?” என்ற கேள்வி எழுப்பினார்.