ஜூலை 11 அதிமுக பொதுக்குழு நடைபெறாது : ஓபிஎஸ் செல்வாக்கு கூடியுள்ளதாக வைத்திலிங்கம் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 4:44 pm

அதிமுக பொதுக்குழு விற்கு பிறகு ஓபிஎஸ் இன் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்துள்ளதாக வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இபிஎஸ் ஓபிஎஸ் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் செல்வாக்கு தமிழகம் முழுவதும் பன்மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த திருமண விழாவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரம் அ.ம.மு.க பொருளாளர் ரங்கசாமியும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி ஆரத்தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!