‘ஜூனியர் கில்லர்’ – சிறுவர்களுக்கான பிரத்யேக ரெடிமேட் ஆடைகள்: கேவல் கிரண் குளோத்திங் அறிமுகம்

Author: Vignesh
27 September 2023, 11:48 am
Quick Share

*சிறுவர்களுக்கு ஏற்ற அனைத்து விதமான ஆடை ரகங்களையும் கொண்டுள்ளது

*சிறுவர்களுக்கான சாதாரண, விளையாட்டுகளுக்கு ஏற்ற மற்றும் பண்டிகை கால ஆடைகள்

சென்னை: செப்டம்பர் 27, 2023: சிறுவர்களுக்கான அதிநவீன வடிவமைப்பில் அவர்கள் விரும்பும் டிசைன்களில் ‘ஜூனியர் கில்லர்’ என்ற பிராண்ட் பெயரில் புதிய ரெடிமேட் ஆடை ரகங்களை கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்டில் 4 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தேவையான அனைத்து பருவ காலத்திற்கேற்ற அனைத்து விதமான டிசைன்களில் ஆடைகள் உள்ளன. ஜூனியர் கில்லர், இளம் பேஷன் ஆர்வலர்களின் மாறுபட்ட ரசனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுகம் விழா மும்பையில் நடைபெற்றது.

இதன் அறிமுக விழாவில் பிரபல நடிகை பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் க்ரோவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்த புதிய ஆடை ரகங்களுக்கான பேஷன் ஷோவும், தொலைக்காட்சி விளம்பரமும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜூனியர் கில்லரின் அறிமுகத் தொகுப்பு, இன்றைய இளம் சிறுவர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆடை ரகங்களைக் கொண்டுள்ள ஜூனியர் கில்லர் சிறுவர்களுக்கான ஆடை வகைகளை சாதாரண ஆடைகள், விளையாட்டுக்கான ஆடைகள் மற்றும் கிளாசிக் ஆடைகள் என வகைப்படுத்தி உள்ளது. டெனிம்கள் முதல் டி-சர்ட்கள், சட்டைகள் மற்றும் கோ-ஆர்ட்ஸ் வரை அனைத்து காலங்களிலும் அணியும் வகையிலான ஆடைகளும் உள்ளன. இந்த ஆடைகளை அணியும் ஒவ்வொரு சிறுவனும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை இவை உறுதிப்படுத்துகிறது.

இந்த புதிய பிராண்ட் அறிமுகம் குறித்து கேவல் கிரண் குளோத்திங் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஹேமந்த் ஜெயின் கூறுகையில், ஜூனியர் கில்லரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்களின் இந்த ஆடை ரகங்கள் இன்றைய இளம் சிறுவர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆடைகள் அவர்களின் தனித்துவமான தன்மையை பிரதிபலிப்பதோடு, அவர்களுக்கான ஒரு அடையாளத்தையும் உருவாக்கும் வகையில் நாங்கள் பார்த்து பார்த்து ஒவ்வொரு ஆடைகளையும் வடிவமைத்துள்ளோம். நவநாகரீக டிசைன் ஆடைகளை விரும்பும் சிறுவர்களுக்கு அதை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார். இந்த ஆடைகள் பல்வேறு ரகங்களில் 499 ரூபாய் முதல் 2399 ரூபாய் வரை உள்ளன. இவை இதற்கான பிரத்யேக ஷோரூம்களான கே–லவுஞ்ச் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி மல்டி-பிராண்ட் அவுட்லெட்டுகளிலும் கிடைக்கும்.

கேவல் கிரண் குளாத்திங் லிமிடெட் பற்றி: கேவல் கிரண் குளோத்திங் நிறுவனம் இந்திய சில்லறை மற்றும் பேஷன் துறையில் 40 ஆண்டு கால பாரம்பரியமிக்க நிறுவனமாகும். இது கடந்த 1980–ம் ஆண்டு கேவல்சந்த் புக்ராஜ் ஜெயின் மற்றும் ஹேமந்த் புக்ராஜ் ஜெயின் ஆகியோரால் டெனிம் ஆடை தயாரிப்பு நிறுவனமாக துவக்கப்பட்டது. ஆனால் இன்று அனைத்து விதமான ஆடைகளுக்கான பிராண்டாக மாறி உள்ளது. இன்று, ஜீன்ஸ், டி-ஷர்ட், சட்டை, ஷார்ட்ஸ், ஜாக்கெட், பிளேசர்கள், வின்டர்வேர், அத்லீஷர், ஆக்சஸரீஸ் போன்ற ஆடைகளுக்கான பிராண்டுகளான கில்லர், இன்டெக்ரிட்டி, லாமேன் பிஜி3 என்ற பெயரில் இந்தியா முழுவதும் பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்கள் மற்றும் பிற ஷோரூம்களிலும் விற்பனை செய்து வருகிறது.மக்களின் நாடித் துடிப்பை அறிந்து பல்வேறு புதுமையான ஆடைகளை இந்நிறுவனம் அவ்வப்போது அறிமுகம் செய்து வருவதால் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் பிராண்டாக இது உருவெடுத்துள்ளது.

கில்லர் பற்றி: ஆண்களுக்கான பிரீமியம் பேஷன் பிராண்டான கில்லர், கேவல் கிரண் குளோத்திங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மற்றும் சொந்தமான முதல் சர்வதேச இந்திய பிராண்டாகும். மேலும் இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டெனிம் பிராண்டுகளில் ஒன்றாகும். பிரீமியம் ரக ஆண்கள் ஆடைகள் பிரிவில் கில்லர் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. ஜீன்ஸ் பிராண்டாகத் துவக்கப்பட்ட, கில்லர் தயாரிப்புகள் இன்று ஆண்களுக்கான ஜீன்ஸ், பேண்ட், கார்கோஸ், கேப்ரிஸ், ஷர்ட்கள், ஜாக்கெட்டுகள், டீ-சர்ட்கள், விளையாட்டு ஆடைகள், உள்ளாடைகள், காலணிகள் (ஷூ, சாக்ஸ்) ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் கில்லர் தயாரிப்புகள் 250க்கும் மேற்பட்ட பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்கள், 180க்கும் மேற்பட்ட கே–லவுஞ்ச் ஷோரூம்கள் 750க்கும் மேற்பட்ட பிரமாண்ட ஷோரூம்கள் மற்றும் 2000–க்கும் மேற்பட்ட மல்டி பிராண்ட் அவுட்லெட்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

  • vijay sethupathi peak carrier சீனாவுக்கு செல்லும் விஜய்சேதுபதி….திடிரென்று எடுத்த முடிவு…!
  • Views: - 289

    0

    0