சீனியர் மாணவரை மண்டியிட வைத்து ஜூனியர்கள் கொடூர தாக்குதல் : கோவை தனியார் கல்லூரியில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2025, 10:55 am

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாக தாக்கி உள்ளனர்.பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டி சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்த சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

Coimbatore Nehru College Juniors Attacked Senior Student

சீனியர் மாணவர் இரத்தக் காயங்களுடன் வலியால் கதறியும், ஜூனியர் மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர். இந்த தாக்குதலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம், கல்லூரிகளில் மாணவர்கள் இடையே நிலவும் வன்முறை கலாச்சாரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • Sruthi Narayanan viral video ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!
  • Leave a Reply