போன் பண்ணால் போதும் உடனே போலீஸ் வரும்.. பெண்களுக்காக தமிழக காவல்துறை அறிவித்த புதிய திட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 9:58 pm

இரவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக, காவல்துறை ரோந்து வாகனத்திலேயே அவர்களை அழைத்துச் செல்லும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பின்றி உணர்ந்தால், உடனடியாக காவல்துறையை அழைத்தாலே போதும், உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையின் ரோந்து வாகனம் அனுப்பி வைக்கப்படும்.

அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ரோந்து வாகனத்திலேயே பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக 1091, 112, 044 – 23452365 & 044 – 28447701 ஆகிய காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த சேவையை பெண்கள் அனைத்து நாட்களிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது காவல்துறை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ